பள்ளியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த பெற்றோர்கள் ஆசிரியர்களை மொய்த்துக் கிடந்தனர். நான் சிந்துவைத் தேடினேன். 4சி வகுப்பு எங்கே என்று கேட்டுச் சென்றடைந்த போது சிந்து என்னைக் கண்டு ஓடிவந்து சிரித்தாள். அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய வகுப்பாசிரியர் யார் என்று கேட்டு அவரைச் சந்திக்க விரைந்தேன். வகுப்பாசிரியருக்குச் சுமார் நாற்பது வயதிருக்கும். என்னைப்பார்த்ததும் ‘சிந்துவின் அப்பா வரலையா’? என்றார். ‘இல்லை. நான் அவருடைய தம்பிதான். அண்ணன் வெளியூரில் இருப்பதால் வரமுடியவில்லை. தப்பா எடுத்துக்காதீங்க சார்’ என்றேன். ‘சரி இந்த முறை பரவாயில்ல. அடுத்த கூட்டத்துக்காவது அவரை வரச் சொல்லுங்க’ என்றார். நான் சிந்துவின் படிப்பைப் பற்றி விசாரித்தேன். பெரிதாகக் குறை ஒன்றும் கூறவில்லை. ‘இங்கிலீஸ்தான் கொஞ்சம் தடுமார்றா. மத்தபடி நோ ப்ராப்ளம்’ என்றவரிடம் விடைபெற்று வெளியே வந்தேன். சிந்துவிடம் ‘உங்க இங்கிலீஸ் டீச்சர் யாரு?’ என்றேன். ‘வாங்க சித்தப்பா நான் கூட்டிட்டு போறேன். அவங்க ரொம்ப நல்ல மிஸ்’ என்று கூட்டிக் கொண்டு சென்றாள். ஸ்டாப் ரூமில் சில ஆசிரியைகள் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தார். ‘அவங்கதான் எங்க இங்கிலீஸ் மிஸ். மாலதி டீச்சர்’ என்று சிந்து காட்டிய திசையில் பார்த்தேன். மஞ்சள் நிறப்புடவை அணிந்த ஒரு பெண் இரண்டு பேருடன் பேசிக் கொண்டிருந்தார்.
நான் அவரருகில் சென்றதும் சிந்துவைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். ‘கொஞ்சம் இருங்க’ என்று கூறிவிட்டு பேசிக்கொண்டிருந்த இருவரிடமும் முடித்துவிட்டு வந்தார். ‘வாங்க சார் நீங்க சிந்துவுக்கு என்னவேணும்?’ என்று கேட்டு அழகாகச் சிரித்தார்.
‘நான் அவளோட சித்தப்பா; அவங்க அப்பா வரமுடியல. அதான் நான் வந்தேன். சிந்து எப்படி படிக்கிறா மேடம்?’
‘நோ ப்ராப்ளம் சிந்து நல்ல பொண்ணு. நல்லா படிக்கிறா.’
‘இல்ல.. இங்கிலீஸ் கொஞ்சம் தடுமாறுறானு..’
‘அதெல்லாம் ஒன்னும் பெரிய பிரச்சினையில்ல. சரியாயிடுவா.. நான் பாத்துக்குறேன்’ என்று சிரித்தவரைக் கவனித்துப் பார்த்தேன். வயது 35 இருக்கும். சுண்டியிழுக்கும் சிவப்பு இல்லையென்றாலும் சிவப்பாக இருந்தார். நல்ல களையான முகம். அளவான மேக் அப், அடர்த்தியான கூந்தல். எடுப்பான மூக்கு, மேலுதட்டின் வலப்புறம் அழகான சிறிய மச்சம், கவர்ந்திழுக்கும் கண்கள், உடலை முழுதாகப் போர்த்தியபடி நேர்த்தியாக ஆடையணிந்து இருந்தார். சிறிது நேரம் பேசிவிட்டு கடைசியாகக் கேட்டேன்.
‘சிந்துவோட அப்பா அம்மா ரொம்ப பிசி மேடம். அதனால் அவளோட படிப்ப நான்தான் கவனிச்சாகனும். சிந்துவோட ப்ராகிரஸ் பற்றி உங்ககிட்ட நான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன். உங்க போன் நம்பர் குடுக்க முடியுமா?’
‘ஓகே. நோ ப்ராப்ளம்.’ என்று நம்பர் குடுத்தார். அவரிடமிருந்து விலகிச் சற்று தூரம் சென்று திரும்பிப் பார்த்தேன். வேறொரு பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தார். எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் நல்ல உடல்வாகு அவருக்கிருந்தது.
வீட்டுக்கு வந்தபிறகும் மாலதி டீச்சர் நினைவே வந்தது. முகத்தில் என்ன ஒரு களை, என்ன ஒரு கனிவான பேச்சு! டீச்சர்னா இவங்கள மாதிரி இருக்கணும். என்று நினைத்தபடி சிறிது நேரத்தில் மறந்து போனேன். இரவு மீண்டும் மாலதி டீச்சர் ஞாபகம் வந்தது. மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது. தூக்கமே வரவில்லை.....
No comments:
Post a Comment